தமிழகத்தில் காலியான தொகுதி... முறைப்படி அறிவிப்பு - இடைத்தேர்தல் எப்போது?

Update: 2024-12-18 11:43 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஈரோடு மாவட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்த வந்த நிலையில், கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, நேற்று சட்டப்பேரவையில் இருந்து, ஈரோடு தொகுதி காலியாக இருப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்ப பட்டது. இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக முறைப்படி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்