பி.வி.சிந்து திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்ற நடிகர் அஜித் - வைரலாகும் போட்டோஸ்

Update: 2024-12-25 03:39 GMT

ஐதராபாத்தில் நடந்த பி.வி.சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர் அஜித் குமார் குடும்பத்துடன் கலந்து கொண்டு வாழ்த்தினார். பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பி.வி.சிந்து-தத்தா சாய் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். நடிகர் அஜித்குமாரை கண்டதும் ஏராளமானவர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்