நாக்கு பிளவு விவகாரம் - ரிலீஸ் ஆனதும் ஹரிஹரன் வேண்டுகோள் | Trichy | Tattoo | Thanthi TV

Update: 2025-01-09 02:37 GMT

திருச்சியில், நாக்கு பிளவு விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், இதுபோன்ற தவறுகளை இனி யாரும் செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஹரிஹரன், ஏலியன் டாட்டூ என்ற பெயரில் பச்சை குத்தும் கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் இளைஞர் ஒருவருக்கு நாக்கு பிளவு அறுவை சிகிச்சை செய்த விவகாரத்தில் ஹரிஹரனை கைது செய்த போலீசார், அவரது கடைக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், 24 நாட்களுக்கு பின் நிபந்தனை ஜாமினில் வெளிவந்த ஹரிஹரன், இனி யாரும் பாடி மாடிஃபிகேஷன் செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்