TASMAC ஹெட் ஆபீஸ் உட்பட பல இடங்களில் Raid.. முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய ED
சென்னை உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் 3 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எழும்பூரில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள மதுபான ஒப்பந்ததாரர்கள் அலுவலகத்தில் சோதனை முடிவடைந்தது. டாஸ்மாக் மதுபான கொள்முதல் விற்பனை, மதுபானக் கூடம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 35 வழக்குகளை பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில், இந்த வழக்கு விவரங்கள், ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுபான கொள்முதல், டெண்டர் விடுக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும்
சில டிஜிட்டல் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும், கணக்கில் வராத பணத்திற்கு உண்டான ஆவணங்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.