2 வயது மகளையும், 6 வயது மகனையும் கிணற்றில் வீசிக் கொன்ற தாய்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள மாளிகைமேடு கிராமத்தில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த கிராமத்தையும் மரண ஓலத்தில் அதிர வைத்திருக்கிறது...
25 வயதேயான இந்த நித்தியாவிற்கு, சரியாக 18 வயது பூர்த்தியடைந்த உடனே அழகப்பன் என்பவருடன் உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்..
தம்பதிக்கு 6 வயதில் அனீஸ் என்ற மகனும், 2 வயதில் கோபிகா என்ற மகளும் இருந்த நிலையில், தம்பதிக்கிடையே கடந்த 7 வருட இல்லற வாழ்க்கையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது...
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு கணவன் - மனைவி இருவரும் வழக்கம்போல் வார்த்தை போர் நிகழ்த்தி கடுமையாக மோதிக் கொண்டதாக கூறப்படும் நிலையில், இதன் எதிரொலியாய் மறுநாள் காலை நிகழ்ந்த கொடூரம் கிராமத்தாரை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது பதைபதைக்க வைத்திருக்கிறது..
(ப்ரீத் டிராக்)
கணவருடனான குடும்ப சண்டையில் விரக்தியில் இருந்த நித்தியா, பச்சிளம் பிஞ்சான தனது 2 வயது மகளையும், 6 வயதை மகனையும் கிணற்றில் வீசிக் கொன்று, பின் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்..
(ப்ரீத் டிராக்)
பச்சிளம் குழந்தைகளின் மரணமும், கணவருடனான சண்டையில் பெண்ணின் விபரீத முடிவும் மாளிகை மேடு கிராமத்தை சோகத்தில் மூழ்கடித்திருக்கும் நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்திருக்கும் போலீசார், நித்தியாவின் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..