தென்காசி மாவட்டம் சிவகிரியில், முறைகேடாக இயங்கக்கூடிய செங்கல் சூளைகள் குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலரை, மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தான் புகார் அளித்தது குறித்து அதிகாரிகள் தான் செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அதன் காரணமாகவே, செங்கல் சூளை உரிமையாளர்கள் ஆள் வைத்து தன்னை தாக்கியதாகவும், சமூக ஆர்வலர் கார்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.