இந்த பிராண்ட் அரிசி வாங்குறீங்களா?..எது ஒரிஜினல்? எது டூப்ளிகேட்? - ரெய்டில் அதிர்ச்சி.. பரபரப்பு
இந்த பிராண்ட் அரிசி வாங்குறீங்களா?..எது ஒரிஜினல்? எது டூப்ளிகேட்? - ரெய்டில் அதிர்ச்சி.. பரபரப்பு
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மில்லின் அரிசி மூடை லோகோவை பயன்படுத்தி, போலி அரிசி மூடைகளை தயார் செய்ததாக திண்டுக்கல்லில் 4 கடைகளில் சோதனை செய்த அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், 6 டன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் தனியார் அரிசி கடை உரிமையாளர்களான துளசிதாஸ் மற்றும் அவரது மகன் விவேக் தரப்புக்கும், புகார் அளித்த தனியார் மில்லின் மேலாளர் உள்ளிட்டோருக்கும் இடையே சுமார் 4 மணி நேரமாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டுக்கல்லில், கர்நாடகாவைச் சேர்ந்த தனியார் மில்லில் உற்பத்தி செய்யப்படும் “மனச கொண்டா, நவாப் ஜீரா ரைஸ்“ என்ற அரிசி சிப்பத்தின் லோகோவை பயன்படுத்தி, தனியார் அரிசி கடை சார்பில் போலியாக அரிசி பைகளை தயார் செய்து அரிசி விற்பனை செய்ததாக அங்கு இருந்த 735-க்கு மேற்பட்ட மூடைகள் உள்ளிட்டவைகளை போலீஸ் உதவியுடன், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் ஜாஃப்லா மற்றும் சார்பு ஆய்வாளர் நிர்மலா ஆகியோர் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினர், வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, அப்பகுதியில் இருந்த அரிசி உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.