11-ஆம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை... அண்ணனே செய்த அசிங்கம் - நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம் | Namakkal

Update: 2024-11-08 05:15 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி வகுப்பில் இருந்தபோது மாணவிக்கு, திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே பள்ளி ஆசிரியர்கள், மாணவியை கைத்தாங்கலாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பிணியாக இருப்பதும், பிரசவ வலி எடுத்திருப்பதை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சில நிமிடங்களில் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது . தகவல் அறிந்த வந்த குழந்தை நல மருத்துவ அதிகாரிகள், மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். ராசிபுரத்தில் வசிக்கும் பொழுது, தனது சித்தி மகன் ரங்கராஜ் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவரை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்