இது படித்தவர்களுக்கு செம சான்ஸ்... ரூ. 3 லட்சத்தை மானியமாக கொடுக்கும் தமிழக அரசு.!
சென்னை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் விருப்பமுள்ளோர் வரும் நவம்பர் 20ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக மூன்று லட்சம் லட்ச ரூபாய், இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.