எலக்ட்ரிக் டவர் மீது ஏறி நின்று இறங்க மறுத்து அடம் பிடித்த நபர் - திண்டுக்கல்லில் பரபரப்பு | Dindigul
திண்டுக்கல்லில் குரங்குகள் தொல்லையால் உயர்மின்னழுத்த கோபுரத்தில் ஏறிநின்று கொண்டு கீழே இறங்க மறுத்து போராடிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... நத்தம் அருகே சேத்தூர் கனவாய் பட்டியைச் சேர்ந்த சதீஷ் பாண்டி ஒரு தையல் தொழிலாளி... இவரது மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் நத்தம் குட்டுப்பட்டி வெங்கல நாச்சியம்மன் கோவில் அருகே உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு இலவச வீடு கட்டித் தர வேண்டும் என்றும், இப்பகுதியில் நிலவும் குரங்குகள் தொல்லையை உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இறங்க மறுத்தார்... தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் 2 மணி நேரம் கழித்து உயர்மின்னழுத்தக் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார்... இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.