சென்னையை பதறவைத்த `தனியார் பள்ளி விவகாரம்'-ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த காவல்துறை-வெளியான புதிய தகவல்

Update: 2024-11-08 07:11 GMT

சென்னையை பதறவைத்த `தனியார் பள்ளி விவகாரம்'-ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த காவல்துறை-வெளியான புதிய தகவல்

திருவொற்றியூரில் உள்ள பள்ளியில் கடந்த அக்டோபர் 25ம் தேதி, 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 35 பேர், வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட சில மணி நேரத்தில் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்டோர் பள்ளியில் ஆய்வு செய்ததில்,

பள்ளி அருகில் தொழிற்சாலை எதுவும் இல்லை என்றும், செயல்முறை வகுப்புக்கு பயன்படுத்தப்பட்ட ரசாயன பாட்டில்கள் சுத்தம் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்தாகவும்,

கடந்த நான்காம் தேதி மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதாக 7 மாணவிகள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனியார் பள்ளி இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சுற்றுப்புற காற்றை கண்காணிக்கவும், சுற்றுப்புற காற்றின் தர கண்காணிப்பு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தவும் உத்தரவிட்டார். அதன்படி, மூன்று நாட்கள் சோதனை நிறைவுபெற்று அறிக்கை தயாரிக்கும் பணியை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வரும் நிலையில், திங்கட்கிழமை பள்ளி திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, வீண் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்