பதற்றத்திலே வைத்திருக்கும் நிலக்கரி மரணங்கள்.. உள்ளே செல்ல விடாததால் பரபரப்பு

Update: 2024-12-20 06:18 GMT

மேலும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்றைய தினம் நிலக்கரி சரிந்து விழுந்து தொழிலாளர்கள் வெங்கடேசன், பழனிச்சாமி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஐந்து பேர் காயம் அடைந்து சேலம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் முறையான நிவாரண அறிவிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மற்றும் தொழிலாளிகள் உயிரிழப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பாக உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

இந்த நிலையில் மேட்டூர் காவல்துறையினர், அனல் மின் நிலைய நிர்வாகம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்