``குடும்ப கட்டுப்பாடு செஞ்சா யாராவது சாவாங்களா? எப்படி குழந்தைகள கரை சேப்பேன்''
- ``குடும்ப கட்டுப்பாடு செஞ்சா யாராவது சாவாங்களா? எப்படி குழந்தைகள கரை சேப்பேன்'' - கதறிய அப்பா.. அம்மா இறந்தது கூட தெரியாமல் துடைத்துவிட்ட பிஞ்சு
- பிரசவம் நல்லபடியாக முடிந்து குழந்தை பெற்றெடுத்த பெண், குடும்ப கட்டுபாடு செய்யச் சொல்லி வற்புறுத்திய மருத்துவர்களால் உயிரிழந்தாரா?.. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த குற்றச்சாட்டு குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பனைமடல் கிராமத்தை சேர்ந்தவர்தான் இந்த செல்லம்..
- லாரி ஓட்டுநரான முருகன் என்பவருடன் திருமணமாகி இவருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளனர்..
- இந்நிலையில், ஐந்தாவதாக கர்ப்பம் தரித்திருந்த செல்லம், கடந்த கடந்த 14 ஆம் தேதி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பெற்றெடுத்ததில்தான் இந்த விபரீதச் சம்பவம்..
- குழந்தை பெற்றெடுத்த செல்லம், குடும்பக் கட்டுப்பாடுக்கான அறுவை சிகிச்சை செய்த போது உடல் நலம் குன்றி பரிதாபமாக உயிரிழந்தது அவரது உறவினர்களை சோகத்தில் மூழ்கடித்து கொதித்தெழச் செய்திருக்கிறது..
- ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் தான் பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள்
- கருமந்துறை - ஏத்தாப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
- இதனிடையே, மனைவியை பறிகொடுத்து கதறி அழுத குற்றம் சுமத்திய லாரி ஓட்டுநர் முருகனை, அவரது மகன் கண்ணீரை துடைத்து விட்டது அனைவரையும் கலங்கடித்தது...
- மருத்துவர்களின் தவறான சிகிச்சையாலேயே, ஐந்து பிள்ளைகளின் தாயான பெண் உயிரிழந்ததாக கூறி சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட இந்த சம்பவமும், பின்னணி சோகமும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..