செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - திடீர் பரபரப்பு

Update: 2025-03-28 14:09 GMT

விழுப்புரம் அருகே செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுவை சாலை ரெட்டியார் மில் பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரிடம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் செல்போன் சரி செய்ய கொடுத்த போது, முன் பணம் கொடுத்தால் தான் சரி செய்து கொடுக்க முடியும் என ஜாகிர் உசேன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண் கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த விழுப்புரம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்