வெளிநாட்டு கரன்சி ஆசை காட்டி 5 லட்சம் ரூபாய் அபேஸ் |வடமாநிலத்தவர்கள் 6 பேர் கைது
ராணிப்பேட்டை அருகே வெளிநாட்டு கரன்சிகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட வடமாநிலங்களை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவை சேர்ந்த அனீப்பாஷா என்பவரின் கடைக்கு வந்த வடமாநில இளைஞர் வெளிநாட்டு கரன்சிகளை காண்பித்து, குறைந்த விலையில் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி அந்த கும்பல் அழைத்தபடி ராணிப்பேட்டைக்கு வந்த அனீப்பாஷாவிடம், பேப்பர் பண்டலை கொடுத்துவிட்டு, 5 லட்சம் ரூபாயை பறித்து சென்றுள்ளது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.