ஆன்லைன் ரம்மியால் உதவி பேராசிரியர் தற்கொலை

Update: 2025-03-18 04:06 GMT
ஆன்லைன் ரம்மியால் உதவி பேராசிரியர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான அருணாச்சலம், உறவினர்கள், நண்பர்களிடம் லட்சக் கணக்கில் கடன் பெற்று, அந்த பணத்தை ரம்மி விளையாடி இழந்துள்ளார். கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு அனைவரும் அழுத்தம் தந்ததால், விரக்தி அடைந்த உதவி பேராசிரியர் அருணாச்சலம், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்