தனியார் பள்ளி எடுத்த அதிர்ச்சி முடிவு! கொதித்தெழுந்த மாணவர்கள்.. கொந்தளித்த பெற்றோர்கள்
கோவையில் அவிநாசி சாலையில் இயங்கி வரும் YWCA பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெயிலையும் பொருள்படுத்தாமல் மாணவர்களும் பெற்றோரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 800-க்கும் மேற்பட்டோர் படித்து வந்த அந்த பள்ளியில் கொரோனாவுக்குப் பிறகு 170 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். மேலும் மேம்பால பணிகளுக்காக பள்ளியின் மொத்த இடத்தில் மூன்று சென்ட் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளியை மூடுவதற்கு பள்ளி நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.