குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர் மிதக்கும் அரசு மருத்துவமனை தத்தளிக்கும் நோயாளிகள் | Ramanathapuram
ராமநாதபுரம் நகரில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும், முழங்கால் அளவு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு நோயாளிகளும், நோயாளிகளுடன் வருபவர்களும் சிரமத்துடன் நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ள நிலையில், மருத்துவமனை வளாகம் முழுவதும் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.