பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என பாடகி சின்னப்பொண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சையில், "அரசுப் பள்ளியில் படிப்போம்" என்ற பாடலை, கலைஞர்களுடன் சேர்ந்து சின்னப்பொண்ணு வெளியிட்டார். தொடர்ந்து அங்கிருந்த ஸ்டுடியோவில், சின்னப்பொண்ணு உற்சாகத்துடன் பாடலை பாடி காட்டினார். இந்த பாடலை கேட்டு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டியதாகவும் சின்னப்பொண்ணு தெரிவித்தார்,