``மேடம் கை சுத்தமாம்.. லஞ்சத்த கையில வாங்க மாட்டாங்களாம்'' -தீயாய் பரவும் `நேர்மை சிகரத்தின்’ வீடியோ
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக பணியாற்றும் மேக்தா மேரி என்பவர் பயனாளர்களிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. ஏழ்மையான நிலையில் அரசு வழங்கும் உதவியை நாடி வரும் ஏழை, எளிய மக்களிடம் அரசு அதிகாரி லஞ்சம் வாங்கும் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.