விவசாயி மனம் குளிர்ந்த மே மாதம்.. "இன்றும் நாளையும்.." உஷார் மக்களே.. வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்
தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரம் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது... தொடர்ந்து இது நாளை மறுநாள் காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது... அதன்பிறகு வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை இன்றும் நாளையும் விடுக்கப்பட்டுள்ளது... கேரளாவில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...