#JUSTIN || புஸ்ஸி ஆனந்த் திடீர் கைது.. அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு | Pussy Anand Arrested

Update: 2024-12-30 11:09 GMT

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை பெண்கள் பொது மக்களிடம் துண்டு பிரசுரமாக கொடுக்கும் என்.ஆனந்த் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள கடிதத்தை பிரசுரமாக மகளிர் கல்லூரி வளாகத்தின் வெளியே மாணவிகளுக்கும், பெண்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தவெக வினர் இன்று பிரசுரங்களை வழங்கி வந்தனர்..

அந்த வகையில் சென்னை தி நகர் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் பொதுமக்கள் பெண்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது..

இதனை பார்வையிடுவதற்காக வந்திருந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை முன் அனுமதி பெறாமல் கூட்டம் குடியதற்காக தி நகர் காவல் நிலைய காவலர்கள் அவரையும் அவர் உடன் இருந்தவர்களையும் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்...

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரங்களாக வழங்கிய தவெகவினர் கைது ..

தவெக தலைவர் விஜய் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக பெண்களுக்கு தமிழகத்தில் உரிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்

அந்த கடிதத்தின் நகலை பள்ளி கல்லூரி மற்றும் பொது இடங்களில் துண்டுப்பிரசுரங்களாக பெண்களிடையே வழங்க தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர் ...

அந்த வகையில் மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி மகளிர் அணி சார்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த வன்கொடுமையை கண்டித்து விழிப்புணர் நோட்டீஸ் கொடுக்கும் போது , அரசுக்கு எதிராக நோட்டீஸ் வழங்குவதை கண்டித்து தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்