"பொங்கல் தொகுப்புடன் மஞ்சள் வழங்க வேண்டும்" - வேதனையுடன் கோரிக்கை வைத்த விவசாயிகள்

Update: 2025-01-04 06:34 GMT

பொங்கல் தொகுப்புடன் மஞ்சள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக நெல்லை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டை பெய்த மழை வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்ட சூழலில், விதைக்கு கூட மஞ்சள் கிடைக்காததால் இந்த ஆண்டு மஞ்சள் குலை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனினும், 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும், வியாபாரிகள் குறைந்த விலைக்கே வாங்குவதால் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், அரசே நேரடியாக விவசாயிகளிடம் மஞ்சள் குலைகளை கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்புடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்