நெருங்கும் பொங்கல்... கரும்பு கொள்முதல்.. வழிமுறைகள் வெளியீடு | Pongal 2025

Update: 2025-01-04 06:36 GMT

பொங்கல் கரும்பை அரசுக்கு நேரடியாக விவசாயிகள் விற்பனை செய்வதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்பை கொள்முதல் செய்ய, மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், வேளாண் இணை இயக்குநர், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆகியோர் குழுவில் இடம் பெறுவர்.

சென்னை மாவட்டத்தில் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் தலைமையில், உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையரை உறுப்பினராக கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு மூலம், அந்த‌ந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தரகர்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கொள்முதல் செய்யப்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் விலை மின்னனுபரிவர்த்தனை மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாகவோ அல்லது இணைப்பதிவாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டோ, கரும்பை விற்பனை செய்து விவசாயிகள் பயனடையலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்