தகாத உறவு..சொல்லியும் கேட்காத மனைவி..வெறியில் கணவன் செய்த செயல் | Police
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரை சேர்ந்த கலையரசி என்பவருக்கு மறைமலை நகரை சேர்ந்த திமுக பிரமுகருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கலையரசிக்கும் அவருடைய கணவர் செந்தில் குமாருக்கும் இடையே சமீபகாலமாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை செந்தில்குமார் - கலையரசி தம்பதி தூங்கி கொண்டிருந்த அறையில் இருந்து தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. அதில் படுகாயம் அடைந்த தம்பதியை தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கலையரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடும்ப பிரச்சினையில் கலையரசியை தீ வைத்து கொளுத்திய செந்தில் குமார் போலீஸ் கைதுக்கு பயந்து மனைவியை கட்டிப்பிடித்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
100 சதவீத தீ காயத்துடனும் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ள செந்தில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.