64 நாட்களாக கடலில் தத்தளித்த நபரை தெய்வமாய் வந்து காப்பாற்றிய சென்னை மீனவர்கள்
ஆழ்கடலில் மூங்கில் படகில் தத்தளித்த நபரை காசிமேடு மீனவர்கள், கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். தகவலறிந்து வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் படகில் வந்தவரை மீட்டு விசாரித்துள்ளனர். இதில், அவர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர் என்பதும், காற்றின் திசை மாறி 64 நாட்களாக கடலில் தத்தளித்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், உண்மையிலேயே மீனவரா? அல்லது ஊடுருவல் முயற்சியா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.