``1 லட்சம் குடுத்தாலும் விடவே மாட்டோம்’’ -எகிறிய பிரைவேட்.. நடு ஹாஸ்பிடலில் உட்கார்ந்து சாதித்த நபர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்சூரன்ஸ் பணம் வராததால், நோயாளியை டிஸ்சார்ஜ் செய்யாததை கண்டித்து, உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். ராசிபுரத்தை சேர்ந்த லலிதா என்ற பெண், கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கூறி, நோயாளியை அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, நோயாளி வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில், இன்சூரன்ஸ் குறித்து பிறகு முடிவெடுக்கலாம் என்று கூறி சமரசம் செய்தனர்.