``இறந்த பெண்ணின் பிணத்தை வைத்து 2 நாள் சிகிச்சை பார்த்த டாக்டர்ஸ்'' - கொதித்தெழுந்த உறவினர்கள்

Update: 2024-12-29 05:20 GMT

ஜெயங்கொண்டத்தில், குழந்தை பெற்றெடுத்த பெண் உயிரிழந்த‌தால், அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காட்டுமன்னார்கோவில் அருகே கொண்டாயிருப்பு பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவருக்கு, 27ஆம் தேதி ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், கர்ப்ப‌ப்பை ஆபரேஷன் செய்த நிலையில், ரத்தப்போக்கு காரணமாக மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் சங்கீதா உயிரிழந்த‌தாக குற்றம் சாட்டிய உறவினர்கள், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த‌தை அடுத்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்