சாலை விபத்தில் கோமா சென்றவர் திடீரென நிர்வாணமாக ஓட்டம் - ஹாஸ்பிடல் செய்த காரியம்

Update: 2024-12-29 04:46 GMT

சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் 2 நாட்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் சுயநினைவை இழந்துள்ளார். ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த நபர், குறித்த விவரம் தெரியாததால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று திடீரென கண்விழித்த அவர் நிர்வாண நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையை கடக்க முயன்றுள்ளார். உடனடியாக அவரை மடக்கி பிடித்து அழைத்து சென்ற மருத்துவமனை ஊழியர்கள் யாரும் பயன்படுத்தப்படாத பழைய இரும்பு கட்டில்கள் போடப்பட்டுள்ள அறையில் அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களாக உணவு கூட வழங்காமல் அவரை தனி அறையில் பூட்டி வைத்துள்ளதாக சக நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்