"மோடி என்ன முடிவு எடுப்பாரோ... குலதெய்வத்தை வேண்டிக்கோ.." - கதிர் ஆனந்த்
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, வேலூர் எம்.பி. கதிர் ஆனந்தை அப்பகுதி பெண்கள் சூழ்ந்து கொண்டு, தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்று தெரிவித்தனர். அதற்கு, முதலமைச்சர் எல்லோருக்கும் உரிமைத்தொகை பெற்றுத் தருவார் என அவர் பதில் அளித்தார். அதனைத் தொடர்ந்து, 100 நாள் வேலைக்கு ஊதியம் உயர்த்தி அறிவித்த நிலையில், முறையாக ஊதியம் தரப்படுவதிலை என்று பெண்கள் முறையிட்டனர். அதற்கு பதில் அளித்த கதிர் ஆனந்த், 100 நாள் வேலைக்கு ஊதிய உயர்வு கேட்கும் நேரத்தில், அந்த திட்டத்தை ரத்து செய்ய மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்.