தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மின்மோட்டாரில் இருந்து மின்சாரம் பாய்ந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவதானப்பட்டியை சேர்ந்தவர் மொக்கை பாண்டியன். இவரது 3 வயது மகன், குடிநீர் எடுப்பதற்காக இயக்கப்பட்ட மின்மோட்டர் அருகே சென்றபோது மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான். இதனையடுத்து அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுவனை கொண்டு சென்று பரிசோதித்த போது சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.