ஆளை மாற்றி சொன்னதால் நடந்த கொடூர கொலை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மதுரை அருகே இசைக்கலைஞர் கொல்லப்பட சம்பவத்தில், ஆளை மாற்றிக் கொலை செய்தது உறுதியாகி உள்ளது. சிலைமான் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்ற டிரம்ஸ் இசைக்கலைஞர் கடந்த 12-ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவர்கள் ஆளை மாற்றிக் கொலை செய்தது தெரியவந்தது. சரவணன் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவருடைய உறவினர்கள் புகைப்படத்தை வைத்துக் கொண்டு கல்மேடு பகுதியைச் சேர்ந்த ஒருவரை தேடி வந்தபோது, புளியங்குளத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளை மாற்றி அழகர்சாமியை காட்டியதால் இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.