ஆங்கிலேயர் ஆட்சியில் தாத்தா கவர்னர்.. 110 வருடம் கழித்து தாத்தாவின் நினைவாக சுற்றி பார்க்கும் பேரன்
ஆங்கிலேயர் காலத்தில் மெட்ராஸ் கவர்னராக இருந்தவரின் பேரன், தன் தாத்தா பயணம் செய்த பகுதிகளை காண உதகைக்கு வருகை தந்துள்ளார்.
1900 முதல் 1904-ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் கவர்னராக பதவி வகித்தவர் ஆர்தர் ஆலிவர் வில்லியர்ஸ் ரஸ்ஸல். இவர் பதவி வகித்த காலங்களில் உதகை ஜார்ஜ் பவனில் தங்கியும், அப்பகுதியில் பல்வேறு இடங்களில் பயணமும் செய்துள்ளார். இந்நிலையில், இவரது பேரனான ஜானி ரசல் தனது மனைவி ஜூடி ரசல் என்பவருடன், 5 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன்பேரில், உதகையில் தனது தாத்தா பயணித்த முக்கிய இடங்களை அவர் சென்று பார்வையிட்டார். மேலும், நூற்றாண்டு பழமை வாய்ந்த செயின்ட் ஸ்டீபன் ஆலயத்தில் அவர் பிரார்த்தனை மேற்கொண்டார்.