வக்கிர புத்திக்கு சிறுமிகளும் இரை..கிழிந்த காதலனின் உண்மை முகம்..அம்பலப்படுத்திய காதலி..

Update: 2024-12-27 06:03 GMT

வக்கிர புத்திக்கு சிறுமிகளும் இரை..கிழிந்த காதலனின் உண்மை முகம்..அம்பலப்படுத்திய காதலி..

சென்னையைச் சேர்ந்த ஐடி பெண் ஊழியர் மற்றும் அவரது சகோதரர் இருவரும், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், கடந்த 2017ம் ஆண்டுமுதல் அம்பத்தூரை சேர்ந்த பரத் என்பவரை காதலித்து வந்த நிலையில், பரத் தன்னை திருமணம் செய்வதாக கூறியதால், அவருக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். மேலும் தனது நகைகளையும் ஏமாற்றி வாங்கிக் கொண்டு, நம்ப வைத்து தன்னுடன் நெருங்கி பழகியதாகவும் கூறியுள்ளார். இதேபோன்று திவ்யா என்ற மற்றொரு பெண்ணிடமும் பரத் பழகியதாக தெரிவித்துள்ளார். பரத்தின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் படியாக இருந்ததால் அவரது சமூக வலைதள பக்கத்தை ஆய்வு செய்தபோது, பல சிறுமிகள், பணக்கார பெண்களை குறிவைத்து ஆசைவார்த்தை கூறி ஏமாற்ற முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். தனது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பரத், அவரது சகோதரனுடன் இணைந்து, கடந்த 25-ம் ஆம் தேதி கோயம்பேட்டில் கார் ஏற்றி தங்கள் இருவரையும் கொல்ல முயன்றதாக சிசிடிவி காட்சியோடு அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், பரத்தின் தம்பி கைதான நிலையில், முன்னாள் காதலன் பரத்தையும் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்