கிறிஸ்மஸ் விழாவில் வெடித்த மோதல்...பெண் காவலருக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சி.. பரபரப்பு

Update: 2024-12-27 05:18 GMT

கிறிஸ்மஸ் விழாவில் வெடித்த மோதல்...பெண் காவலருக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சி.. பரபரப்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கிறிஸ்மஸ் விழாவின்போது இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல்,தொடர்பாக ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திசையன்விளையை அடுத்த நம்பிக்குறிச்சி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கு நின்று கொண்டிருந்த வடக்குத் தெருவைச் சேர்ந்த கனிஷ்கர் என்ற இளைஞர், தனது இரு சக்கர வாகனத்தில் அதிக சத்ததுடன் புறப்படதாக தெரிகிறது. இதை கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தட்டிக்கேட்டபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு வந்த கனிஷ்கரின் தந்தை இசக்கி முத்து, எதிர் தரப்பைச் சேர்ந்த ராஜேஷ், அவருடைய தம்பி ராக்கி மற்றும் சில தாக்கியதாக தெரிகிறது. பின்னர், இரு தரப்பினரும் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, அங்கேயும் வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, அவர்களை சமாதானப்படுத்த முயன்ற பெண் காவலர் ராமலட்சுமி என்பவர் காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதல் தொடர்பாக, இசக்கி முத்து குடும்பத்தினர் உள்பட ஏழு பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்