சிக்கன் ஃபிரைடு ரைசில் நெளிந்த புழு...அதிர்ச்சியூட்டும் காட்சிகள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, பேக்கரியில் வாங்கிய சிக்கன் ஃபிரைடு ரைஸில் புழு இருந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே இயங்கும் பேக்கரி ஒன்றில், கல்லூரி மாணவர்கள் 5 பேர், சிக்கன் ஃபிரைட் ரைஸ் வாங்கி உண்டபோது, அதில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. அதுகுறித்து முறையிட்டபோது, சிக்கன் ஃபிரைட் ரைஸ்க்கு பில் தர வேண்டாம் என்று பேக்கரி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து, சிக்கன் ஃபிரைட் ரைஸில் இருந்த சிக்கனை பிரித்துப் பார்த்தபோது அதில் புழு வெளியே வந்ததால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், அதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.