ஹால்மார்க் விஷயத்தில் தலையிட்ட ஐகோர்ட் - மத்திய அரசுக்கு கிடுக்கிபிடி கேள்வி
தங்க நகை விற்பனையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஹால்மார்க் (HUID) கட்டாயமாக்கபட வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இந்தியாவில் 803 மாவட்டங்கள் உள்ள நிலையில் 343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் கட்டாயம் ஆக்கியது ஏன் எனவும், 343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் கட்டாயமாக்கினால் மற்ற பகுதிகளில் முறைகேடுகள் நடக்காதா? எனவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.