தமிழகமே திரும்பி பார்த்த விவகாரத்தில் நேரில் இறங்கிய NHRC - காட்டுக்கு நடுவே வெறும் தரையில் அமர்ந்து குறைகளை கேட்ட அதிகாரிகள்

Update: 2024-09-19 03:31 GMT

மாஞ்சோலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள், இரவு வரை விசாரணை நடத்தினர்.

நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை அதிகாரிகளாக தேசிய மனித உரிமை ஆணைய டிஎஸ்பி ரவி சிங் மற்றும் ஆய்வாளர் யோகேந்தர் குமார் திரிபாதி உள்ளிட்ட நியமிக்கப்பட்டனர்.

4 நாட்கள் விசாரணை நடத்த திட்டமிட்ட அவர்கள், நேற்று காலை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தொழிலாளர் நலத்துறை, வனத்துறை ஆகியோரிடம் மாஞ்சோலை தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை குறித்து ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் விசாரணை நடத்த சென்றபோது, மாஞ்சோலை பகுதிக்குள் நுழையும் முன்பாக அமர்ந்து, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி புகார் அளித்தார். அவரிடம் விசாரணை நடத்தி, சில ஆவணங்களையும் பெற்றனர்.

மாஞ்சோலை வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்த விசாரணை அதிகாரிகள், மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தரையில் அமர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்