நியூ இயர் நைட் சென்னையில் என்ன நடக்கும்? பரவிய அதிர்ச்சி வீடியோவால் அச்சத்தில் மக்கள்

Update: 2024-12-25 02:35 GMT

நியூ இயர் நைட் சென்னையில் என்ன நடக்கும்... சோசியல் மீடியாவில் பரவிய அதிர்ச்சி வீடியோவால் அச்சத்தில் மக்கள் - ஹை அலர்ட்டில் போலீஸ்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் குறிவைத்து பைக் ரேஸ் நடத்த இருப்பதாக சோஷியல் மீடியாவில் பரவிய தகவலின் அடிப்படையில், 4 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..

காதைப் பிளக்கும் சத்தத்துடன் சாலையில் பைக் ஸ்டண்ட் செய்யும் இளைஞர்கள், பைக் வீலிங், பைக் ரேஸ் என்றெல்லாம், செய்து பிறரை ஈர்ப்பதற்காகவும், தங்களை ஒரு பிரபலம் ஆக்கிக் கொள்வதாகவும் நினைத்துக் கொண்டு, செய்து வந்த அட்ராசிட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இதனால், பைக்குகளில் இருந்து கீழே விழுந்து கை, கால்கள் முறிந்தவர்கள் ஏராளமானோர் இருக்க, இவை எல்லாம் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.

சில நாட்களாக, இந்த மாதிரியான செய்திகள் ஏதும் வராமல் இருந்த நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி, பைக் ரேஸ் உள்ளிட்டவை மீண்டும் ஆரம்பிக்காமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, இரவில் பைக் ரேஸில் ஈடுபட்டு, பைக்கில் சாகசம் செய்த வீடியோக்களை இளைஞர்கள் சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வந்தனர். உயிருக்கே உலை வைக்கும், இந்த பைக் ரேஸ்களை தடுப்பதற்கு தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த சென்னை போலீசார், பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை எச்சரிக்கை செய்து பிரமாணப்பத்திரம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பினர்.

முன்னதாக, சென்னை ராயபுரத்தில் இருந்து காமராஜர் சாலை வழியாக செல்லும் சாலை உள்பட பல பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸை அரங்கேற்றி வந்தனர்.

ஆங்காங்கே, சிலர் மீது இது தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்ட நிலையில், பைக் ரேஸ் குறையத் தொடங்கியது. இந்த சூழலில் தான், 2025 புத்தாண்டை ஒட்டி, மீண்டும் பைக் ரேஸ் ஆரம்பிப்பது தொடர்பாக சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

வெறும் லைக்குகளுக்காக, அதிக CC -க்கள் கொண்ட பைக்குகளில், ஆபத்தான முறையில் பைக் ரேஸ் செய்து,

பொதுமக்களுக்கு அச்சுறுத்த இளைஞர்கள் மீண்டும் திட்டமிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு வருவதை ஒட்டி, இந்த பைக் ரேஸர்கள் இரவு நேரத்தில் பைக் சாகசத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, இதற்காக சோஷியல் மீடியாவில் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, இளைஞர்கள் பலரும் தாங்கள் தயாராக இருப்பதாக கூறி, பைக்கில் சாகசம் செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் எதிரொலியாகவே, அந்த வீடியோக்களில் இருந்த பைக்கின் பதிவு எண்களைக் கொண்டு, சம்பந்தப்பட்ட இளைஞர்களை போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் வலைவீசித் தேடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே, 4 இளைஞர்களைப் பிடித்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்