துப்பாக்கி குண்டு பாய்ந்து யானை உயிரிழக்கவில்லை- வனத்துறை தகவல்

Update: 2024-12-24 20:38 GMT

கோவையில் பெண் காட்டு யானை உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்திய வனத்துறையினர், அந்த யானை துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். கோவை தடாகத்தை அடுத்த பணிமடி அருகே பெண் யானை உயிரிழந்ததை அடுத்து, அதிகாரிகள், மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில், மூன்று கால்நடை அலுவலர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த யானை துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழக்கவில்லை என்று கண்டறிந்துள்ளனர்.

பாலூட்டும் பெண் யானையின் மஸ்த் டெம்போரல் சுரப்பினை சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயம் என்று தவறாக தகவல் பரப்புகிறார்கள் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்