மதுரை மாவட்டம் மேலூர் அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பதினெட்டாங்குடியில் கிராம இளைஞர்கள் சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், மதுரை, சிவகங்கை, தேனி, கம்பம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டுவண்டிகள் கொண்டு வரப்பட்டன. பெரியமாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், சின்னமாடு பிரிவில் 20 ஜோடிமாடுகளும் பங்கேற்ற நிலையில், பந்தயத்தில் மாடுகள் சீறிப்பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.