2 கிலோ தங்கம் திருட்டு.. வீட்டிற்கு வந்த தொழிலதிபர் காத்திருந்த ஷாக்.. நெல்லையில் அதிர்ச்சி
நெல்லை பாளையங்கோட்டை மகாராஜா நகரை சேர்ந்தவர் ரஞ்சன். இவர் சிவகாசியில் ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கி அதன் இயக்குனராக உள்ளார். இந்த நிலையில் ரஞ்சன் தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க நாணயங்கள் திருடு போனதாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். நான் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்ற நேரத்தில், பீரோவில் வைத்திருந்த 2.220 கிலோ எடையுள்ள தங்க நாணயங்கள் திருடு போய் உள்ளதாகவும், எனது வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். ரஞ்சன் புகாரின் பேரில் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர் வீட்டில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.