ஆக்ரோஷமாக சீறி வரும் அலைகள்.. கடலுக்கு செல்லாத மீனவர்கள் - ரூ.150 கோடி வர்த்தகம் பாதிப்பு
துறைமுகம், கீச்சாங்குப்பம் அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் அடுக்கடுக்கான அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்து வருகிறது. கடல் நீர், மீனவ கிராமங்களுக்குள்ளேயும் புகுந்துள்ளது. பேரிரைச்சலுடன் கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் வருவதால், 4 ஆயிரம் படகுகள் கரையேற்றப்பட்டு, பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் ஒரு வாரம் கடலுக்கு செல்லாததால் நாள் ஒன்றுக்கு 20 கோடி வீதம், இதுவரை 150 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, மீனவர்கள் கூறியுள்ளனர்.