யானை ரூபத்தில் காட்சியளித்த முருகப்பெருமான்.. மெய்சிலிர்த்து பார்த்த பக்தர்கள்

Update: 2025-03-18 09:44 GMT

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலையில் பாரம்பரிய யானை விரட்டல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பங்குனி பெருவிழாவை முன்னிட்டு வள்ளி கல்யாணம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அரசலாற்றங்கரையில் நடைபெற்ற யானை விரட்டல் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் வள்ளியை விநாயகப்பெருமான் யானை உருவத்தில் வந்து விரட்டும் காட்சியும், பின் முருகப்பெருமான் சுய ரூபத்தில் காட்சி அளித்தலும் நிகழ்த்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்