இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - கணவரை கைது செய்து போலீஸ் விசாரணை

x

புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுவாதி என்பவருக்கும் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தனேஸ்வரனுக்கும் கடந்த 2023-ல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மனைவி சுவாதியின் மீது தனேஸ்வரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பல வழிகளில் சுவாதியை அவர் கொடுமை படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்துள்ளனர். இந்நிலையில், சுவாதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சுவாதியின் உறவினர்கள் அவரது இறப்பிற்கு தனேஸ்வரன் தான் காரணம் என குற்றம் சாட்டி, அவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தனேஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்