தொப்பை என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - வயிற்றில் இருந்த 6 கிலோ.. அரண்டு போன டாக்டர்ஸ்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஆனந்தவள்ளி என்பவர் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றுக்குள் பெரிய அளவிலான கர்ப்பப்பை கட்டி இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து ஆனந்தவள்ளிக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட 3 மணி நேர அறுவை சிகிச்சையின் மூலம், வயிற்றிலிருந்து 6 கிலோ கட்டியை வெளியே எடுத்தனர். மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை மருத்துவ குழுவினர் செய்து முடித்து சாதனை படைத்துள்ளனர்.