டெண்டர் ரத்தானது தொடர்பான வாக்குவாதத்தின் போது நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி தலைவரை ஜாதி பெயர் கூறி திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்ததாரர்கள் நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு ஒப்பந்ததாரர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் அளித்த புகாரின் அடிப்படையில்
நகர்மன்ற தலைவராக இருக்கும் சிவகாமி மற்றும் அவரது உதவியாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.