மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.. முதலமைச்சரை பாராட்டும் மக்கள் | MK Stalin

Update: 2024-12-20 02:09 GMT

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கி நலம் விசாரித்தார். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டு, பயனாளர்களுக்கு மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை நஞ்சனாபுரம் கிராமத்தை சேர்ந்த சுந்தரம்பாள் 2 கோடியாவது பயனாளராக பதிவு செய்யப்பட்டார். அவருக்கு ஈரோட்டில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கி உடல்நலம் விசாரித்தார். அங்கு இதே திட்டத்தில் பயன்பெற்று வரும் வசந்தா என்ற மூதாட்டியையும் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார். மூதாட்டி சுந்தரம்பாள் பேசிய போது திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்