திருமண வரன் தேடும் வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் முதலீட்டு மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க, சென்னை இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. திருமண வரன் தேடும் வலைத்தளங்களில், அதிக சம்பளத்தில் பெரிய வேலையில் இருப்பதாக போலி கணக்கை உருவாக்கும் சைபர் குற்றவாளிகள், தங்களது Profile-ஐ விரும்பி தொடர்புகொள்பவர்களை குறிவைக்கின்றனர். அவர்களிடம் நெருங்கி பழகி, நம்பிக்கையை ஏற்படுத்தியவுடன், போலியான முதலீட்டு இணையதளங்களை அறிமுகம் செய்து, சிறிய தொகையை லாபமாக வழங்க செய்கிறார்கள். அதனை நம்பி பெரிய தொகையை முதலீடு செய்தால், பணத்தை சுருட்டிக்கொண்டு தொடர்பை துண்டிக்கிறார்கள். இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ள இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம், கட்டணமில்லா உதவி எண் 1930-ஐ அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.