நெல்லையை உலுக்கிய கொலை வழக்கு - தமிழக டிஜிபி, சிபிஐக்கு பறந்த உத்தரவு

Update: 2025-03-26 11:14 GMT

நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த முகமது மைதீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜாகிர் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதோடு, அவரது குடும்பத்திற்கு காவல்துறை பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தமிழக டிஜிபி மற்றும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்